கொரோனா தொற்று உறுதியான பின்னர் வீட்டிலிருந்து தலைமறைவான நபரை கண்டறிய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொரளை பொலிஸ் பிரிவிலுள்ள, மகசீன் வீதியில் வசிக்கும் இளைஞனே டிமிக்கி விட்டுள்ளார்.
28 வயதான சங்கீத் தனுஷ்க தபரே, பி.சி.ஆர் பரிசோதனையால் மே 26 அன்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, அவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்ல பொரளை காவல்துறை அதிகாரிகளும் சுகாதார அதிகாரிகளும் நேற்று (28) வீட்டிற்கு சென்றபோது, அவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறியதை குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களை தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோருகின்றனர்.
பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி- 071 85 91 587
பொரளை பொலிஸ் நிலையம் – 011 26 94 019