பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டில் ஜுனின் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு பெரு அரசுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஜுனின் மாகாணத்தில் உள்ள விஸ்கடின் டெல் எனெ என்ற மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து ஷெரிங் பாத் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். பெரு நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசுக்கு எதிரான தாக்குதல்களை ஷெரிங் பாத் கிளர்ச்சியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஜுனின் மாகானத்தில் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.