நம் எல்லோர் வீட்டிலும் கொத்தமல்லி விதைகள் கண்டிப்பாக இருக்கும். அந்த கொத்தமல்லி விதைகளால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதுவும் இந்த கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் எல்லாம் ஏற்படும். என்னென்ன நன்மைகள், எப்படி இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க.
4 தேக்கரண்டி கொத்தமல்லி விதையை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி இரவு முழுவதும் ஊறவைத்த இந்த தண்ணீரை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அப்படி குடித்தால் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் அரிப்பு, கண் வீக்கம் மற்றும் கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்யும்.
அதோடு இந்த நீர் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இந்த தண்ணீரை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.
வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கும் பெண்கள் வாரத்திற்கு இரண்டு முறை இந்த கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீரை குடிப்பதன் மூலம் நலம் பெற முடியும்.
இந்த கொத்தமல்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீராகவும் குடிக்கலாம். 150 மிலி தண்ணீரில் 3 கிராம் கொத்தமல்லி விதைகள் என்கிற விகிதத்தில் சேர்த்து இதை கொதிக்க வைத்து குடிக்கலாம். இப்படி குடிப்பதால் தலைவலி பிரச்சினை குணமாகும். அதோடு எலும்புகளை பலமடைந்து, எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும். கொத்தமல்லி விதைகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.