26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
மருத்துவம் லைவ் ஸ்டைல்

உடலுக்கு பல நன்மைகளைத் தரும் பொன்னங்கண்ணி கீரை!

நாம் என்னதான் பாஸ்ட் புட் என்று எதையாவது சாப்பிட்டாலும், வாரத்திற்கு ஒன்றல்லது இரண்டு முறையாவது நம் உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். பலருக்கும் கீரைகளின் அருமை தெரியாததால் இதைப் பின்பற்றுவதில்லை. நம் உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எல்லாம் நாம் தினமும் உண்ணும் உணவின் மூலம் தான் கிடைக்கின்றது. அதையும் நாம் தவறவிட்டால் நம் உடலின் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்களே கிடைக்காமல் போய்விடும்.

எனவே சரியான சீரான உணவை நாம் சாப்பிடுவது மிகவும் முக்கியம். குழந்தைகள், இளம் பருவத்தினர், ஆண்கள், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் என அனைவருக்குமே சீரான உணவு என்பது மிகவும் அவசியம்.

அப்படி பார்க்கையில் கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதிலும் பொன்னங்கண்ணி கீரை என்பது கீரை வகைகளில் மிக சிறந்த ஒன்று. இது சருமத்திற்கு உடலுக்கு என பல நன்மைகளைத் தருகிறது. இந்த பதிவில் அதன் மருத்துவ நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

  • உடல் எடையைக் குறைக்க சாப்பிடாமல் இருக்க கூடாது. சரியான ஆரோக்கியமான உணவை அவ்வப்போது அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். பொன்னங்கண்ணி கீரை இதற்கு உதவியாக இருக்கிறது. பொன்னங்கண்ணி கீரையுடன் மிளகு, உப்பு சேர்த்து சாப்பிட்டு நாளடைவில் உடன் எடை சீராக குறையும்.
  • பொன்னங்கண்ணி கீரை எடை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது. அப்படியொரு சிறப்பு அம்சம் பொன்னங்கண்ணி கீரைக்கு உண்டு.
  • பொன்னங்கண்ணி கீரையை துவரம் பருப்பு மற்றும் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். பொன்னங்கண்ணி கீரையை தவறாமல் சாப்பிட்டால், உங்கள் உடல் வலிமை நன்றாக இருக்கும். எலும்புகள் வலுவாக இருக்கும்.
  • வாய் துர்நாற்ற தொல்லையிலிருந்து விடுபட பொன்னங்கண்ணி கீரையைத் தவறாமல் சாப்பிடலாம்.
  • பொன்னங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக இருக்கும். அதோடு நாமும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
  • பொன்னங்கண்ணி கீரைக்கு மூல நோய் மற்றும் மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும் சக்தி உள்ளது.
  • பொன்னங்கண்ணி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டால், பகலிலும் சந்திரனைப் பார்க்க முடியும் என்று நம்ம ஊர் பெரியவர்கள் சொல்லக்கேட்டிருப்போம். அந்த அளவிற்கு கண் பார்வை நன்றாக தெரியும்.
  • இரத்தத்தை சுத்தம் செய்யுங்கள்.
  • பொன்னங்கண்ணி கீரை தண்ணீரில் நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, கடுகு, சிறிய வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகு ஆகியவற்றைச்  சேர்த்து நன்கு வேகவைத்து, கடைந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
  • இரவில் போதுமான தூக்கம் வராததாலும், செல்போன், கணினி போன்ற மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் பார்ப்பதாலும் கண்கள் சிவந்து போகின்றன. இதிலிருந்து விடுபட, பொன்னங்கண்ணி கீரையை பொறியியல் செய்து  சாப்பிட்டால் கண்கள்  ஆரோக்கியமாக இருக்கும்.
  • பொன்னங்கண்ணி கீரைக்கு தங்கம் போன்ற தோலைக் கொடுக்கும் சக்தி உள்ளது. இந்த கீரைகளை சாப்பிடுவது அழகை அதிகரிக்கும்.
  • பொன்னங்கண்ணி கீரையின் தண்டுகளை மண்ணில் நடப்பட்டால் கீரை செடி நன்றாக வளரும். இதை நீங்கள் உங்கள் வீட்டிலேயோ மாடி தோட்டத்திலேயோ வளர்க்கலாம்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment