25.4 C
Jaffna
January 6, 2025
Pagetamil
விளையாட்டு

10 வருசமாச்சு நான் ஐபிஎல் விளையாடி, இன்னும் பணம் கொடுக்கல: ஆஸி வீரர் வருத்தம்!

ஐபிஎல் தொடரில் 10 வருடங்களுக்கு முன்பு விளையாடிய ஆஸ்திரேலிய வீரருக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ இன்னும் இந்திய அணி வீராங்கனைகளுக்கு வழங்கவில்லை என செய்திகள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ அவசர கதியில் இந்திய வீராங்கனைகளுக்கு அந்த பரிசுத்தொகையை வழங்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இந்த செய்தியை உலகம் முழுவதும் பரவியது. இந்த செய்தியை அறிந்துகொண்ட ஆஸ்திரேலிய அணி முன்னான் வீரர் பிராட் ஹாட்ஜ், 2011ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய தனக்கும் இன்னும் ஐபிஎல் தொகை நிலுவையில் உள்ளது. பிசிசிஐ இதை உடனே பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் வெளியிட்டுள்ள பிராட் ஹாட்ஜ், “கொஞ்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் 35 சதவீத தொகை கிடைக்கவில்லை. பிசிசிஐ அந்த தொகையைப் பெற்றுத்தர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் பங்கேற்ற ஹாட்ஜ், 35.63 சராசரியுடன் 285 ரன்கள் குவித்து அசத்தினார். கொச்சி டஸ்கர்ஸ் அணி வங்கி உத்தரவாதம் அளிக்க முன்வராத காரணத்தால், அந்த அணியை பிசிசிஐ நீக்கியது.

ராட் ஹாட்ஜ், ஆஸ்திரேலிய அணிக்காகச் சிறப்பாக விளையாடி வந்தார். முதல் 5 டெஸ்டில் ஒரு இரட்டை சதம் விளாசி அசத்தியிருந்தார். இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மிகப்பெரிய நட்சத்திர வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போது இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். தற்போது அவருக்கு 46 வயதாகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment