கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 159 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 513 பேர் தொற்றாளர்களாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தள்ளார். அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 1469 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிற்கான உலருணவு பொருட்களை வழங்கும் செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.