24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

இன்று சந்திர கிரகணம்: இலங்கையர்களும் இரத்த நிலாவை காணலாம்!

இந்த ஆண்டின், முதல் சந்திர கிரகணம் இன்று (26) நிகழ்கிறது. கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ எனப்படும், இரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது. கிரகணத்தின் ஒரு பகுதியை இலங்கையில் வெற்று கண்ணால் காணலாம்.

சூரிய ஒளியை தான் நிலவு பிரதிபலிக்கிறது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.

பூமி – நிலவு இடையேயான சராசரி தொலைவானது, 3.84 இலட்சம் கிலோமீற்றரை விட குறைவாக இருக்கும் போது, ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது. அப்போது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும், நிலவு தெரியும்.

சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர, 365.26 நாளாகிறது. நிலவு ஒரு முறை பூமியைச் சுற்ற, 29.32 நாளாகும். இக்கணக்கீட்டு முறையில் பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது.
சூப்பர் மூன்’ ஏற்படும் போது, நிலவானது பூமிக்கு அருகில் வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், ஒரேஞ்ச் முதல் இரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது, இரத்த நிலா எனப்படுகிறது.

இலங்கையர்கள் இன்று சந்திர கிரணத்தின் ஒரு பகுதியை காணலாம். மாலை 6.23 முதல் 7.20 வரயான 57 நிமிடங்கள் கிரகணத்தை பார்க்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

Leave a Comment