முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு நேற்று (24) அனுமதிக்கப்பட்ட 51 நபர்களுடன் பொலிசார், இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
கடந்த 17.05.21 ஆம் திகதி கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் கடந்த ஏழுநாட்கள் கடல்நீரில் எடுக்கப்பட்ட தீர்த்தத்தில் அணையா விளக்காக எரிந்த தீர்த்தம் மற்றும் மடைப்பண்டங்களுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு நேற்று அதிகாலை (24) எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு பூசைகள் நடைபெற்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1