யாழ் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இராணுவத்தின் மகளிர் மோட்டார் சைக்கிள் படையணியினர் இன்றையதினம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் இன்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமையினை தவிர்ப்பதற்காகவே இராணுவத்தினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே வேளை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1