29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

மாலி மக்கள் தலைவர்களை விடுவிக்க ஐ.நா பொதுச்செயலாளர் அழைப்பு!

மாலி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மக்கள் தலைவர்களை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

“மாலியின் பொதுமக்கள் தலைவர்களை தடுத்து வைத்திருக்கும் செய்திகளால் நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று குட்டெரெஸ் ட்விட்டரில் கூறினார். “நான் அமைதியாகவும் அவர்களின் நிபந்தனையற்ற விடுதலைக்காகவும் அழைக்கிறேன்.” எனறும் குறிப்பிட்டுள்ளார்.

ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற இராணுவ சதி புரட்சியை தொடர்ந்து பிராந்திய பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தலின் கீழ் நிறுவப்பட்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி பஹ் ந்தாவ் மற்றும் பிரதமர் மொக்டர் ஓவானே வழிநடத்துகின்றனர்,

எனினும், கடந்த திங்களன்று அவர்கள் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இரண்டாவது சதித்திட்டத்தின் அச்சத்தை எழுப்பியது.

பெயரை மறுத்துவிட்ட இரண்டு மூத்த அதிகாரிகள், பஃபாக்கோவின் புறநகரில் உள்ள கேட்டி இராணுவ முகாமுக்கு படையினர் என்டாவ் மற்றும் ஓவானை அழைத்துச் சென்றதாக ஏ.எஃப்.பியிடம் தெரிவித்தனர்.

இடைக்கால அரசு, முந்தைய நிர்வாகத்தின் போது இராணுவம் கட்டுப்படுத்திய மூலோபாய இலாகாக்களை மறுசீரமைப்பதில் அக்கறை காண்பித்ததையடுத்து, தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் இராணுவ அமைச்சர் சாடியோ கமாரா மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேணல் மோடிபோ கோன் ஆகியோர் இடைக்கால ஆட்சி தலைவர்களால் மாற்றப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment