26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
கிழக்கு

சவக்காலையில் புலிகள் ஆயுதம் புதைத்தார்களா?

ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மட்டக்களப்பு, பன்குடாவெளி வயல் பிரதேசத்திலுள்ள தனியார் சவக்காலையொன்றில் நேற்று (24) அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் கரடியனாறு பொலிஸாரும் இணைந்து இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்படி இடத்தில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் அகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், சவக்காலையின் கல்லறைகளுக்கு அருகில் தோண்டப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரமாக சவக்காலையின் பல இடங்கள் தோண்டப்பட்டன. எவ்வித வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென படையினர் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பிள்ளையான்

east tamil

மட்டக்களப்பில் க்ளீன் சிறிலங்கா செயலமர்வு: அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்

east tamil

பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டவர் உயிரிழப்பு

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

குகதாசன் கண்டனம்

east tamil

Leave a Comment