தவறுதலாக எரிகாயங்களிற்கு உள்ளான இளம் குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நல்லூரடி, கல்வியங்காட்டை சேர்ந்த சஜீவன் தர்சிகா (28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். இவர் முகாமைத்துவ உதவியாளராவார்.
கடந்த 20ஆம் திகதி வீட்டில் குப்பை கூட்டி, அதற்கு தீ வைத்துள்ளார். 7 லீற்றர் மண்ணெண்ணெய் கொள்கலனை எடுத்துச் சென்று குப்பைக்கு ஊற்றிவிட்டு தீ வைத்துள்ளார். இதன்போது, தவறுதலாக தீ பற்றி அவரும் எரிகாயமடைந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.



