தென்மேற்கு பருவ மழை, வங்காள விரிகுடாவின் சூறாவளி நிலைமை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் களுகங்கையின் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட கூடும்.
இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, கிரிஎல்ல அயகம ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அடுத்த 3 மணித்தியாலங்களில் சிறிய அளவில் வௌ்ளப்பெருக்கு எதிர்கொள்ளலாம்.
அத்தனகளு ஓயா, களனி கங்கை, களு கங்கை, ஜின் கங்கை, நில்வல கங்கை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட பல நீர்வழிகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதுவரை பதிவாக மழைவீழ்ச்சியின் அடிப்படையில் இந்த நதி படுகைகளை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் குறைந்தளவில் இருந்தாலும் எதிர்பார்க்கப்படும் மழையின் அடிப்படையில் அடுத்த சில தினங்களில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1