கருப்பு பூஞ்சை நோய் என்பது இலங்கைக்கு புதிதானதல்ல. இவ்வாண்டில் இதுவரையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 24 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அவர்களில் யாரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ப்ரீமாலி ஜயசேகர தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தநோய் தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. இதற்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான சகல மருந்துகளும் இலங்கையில் காணப்படுகிறது.
நியூகோ மைஸிஸ் எனக் கூறப்படும் கருப்பு பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதானதல்ல. இலங்கையில் கடந்த 2019 இல் இந்நோயால் பாதிக்கப்பட்ட 42 நோயாளர்களும், 2020 இல் 24 நோயாளர்களும், இவ்வாண்டில் இதுவரையில் 24 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார்.