வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு எழுமாறான வகையில் அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அன்றையதினம் பிரதேசசபையின் தவிசாளர் தவிர்க்க முடியாத காரணத்தினால் சமூகமளிக்கவில்லை.
மறுநாள் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற அவர் அன்ரியன் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1