24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

வடக்கில் பிசிஆர் சோதனை தடைப்படுகிறது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முதல் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பி.சி.ஆர்‌. சோதனைக்குரிய உபகரணங்‌கள் மற்றும்‌ இரசாயனங்கள்‌ ஆகியவை இல்லாமையால்‌ பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாத இறுதியிலிருந்து பி.சி.ஆர்‌ பரிசோதனைகள்‌ அதிகரிக்கப்பட்டிருந்‌தன. அதற்குரிய உபகரணங்கள் மற்றும்‌ பி.சி.ஆர்‌ இயந்திரத்துக்குரிய இரசாயனங்கள்‌ என்பவை கிடைக்கப் பெறுவதில்‌ சிக்கல்‌ நிலைமைகள்‌ காணப்பட்டன.

எக்ஸ்ரக்ஸன் ரீஜென்டஸ்‌ எனப்படும்‌ இரசாயனப்‌ பொருளுக்கே தட்டுப்பாடு நிலவுவதால்‌ யாழ்ப்பாணம்‌ போதனா மருத்துவமனையிலும்‌, யாழ்ப்பாணப்‌. பல்கலைக்கழக மருத்துவபீடத்திலும்‌ 3.நாள்களுக்கு சமூகமட்டத்திலான பி.சி.ஆர்‌ மாதிரிகள்‌ சோதனைக்கு உட்படுத்‌தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்‌ளது.

இவ்வாறு சமூக மட்டத்திலான பி.சி.ஆர்‌ சோதனைகள்‌ மேற்கொள்ளாமல்‌, அவசர தேவை கருதிய பி.சி.ஆர்‌ சோதனைகளை மட்டும்‌ மேற்கொள்ளத்‌ திட்டமிட்டுள்ளதால்‌, யாழ்ப்பாணத்தில்‌ கொரோனாதொற்று அபாய நிலைய எட்டக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை 2,000 இற்கு மேற்பட்ட பி.சி.ஆர்‌ மாதிரிகள்‌ சோதனைக்கு உட்‌படுத்தப்படாமல்‌ தேங்கியுள்ளமையும்‌ குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment