கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு கல்முனை பொலிஸாரால் உணவு வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் வழிகாட்டலில் பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக்க உதயங்கர தலைமையிலான பொலிஸார் இன்று(24) இப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு உணவுகளை வழங்கினர்.
இந்த மனிதாபிமானப் பணியில் ஏலவே தமிழ் இளைஞர்சேனை உள்ளிட்ட பல தரப்பினரும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-பா.டிலான்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1