மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்ற அதிபருக்கு அபராதம்!

Date:

பொது நிகழ்ச்சியில் மாஸ்க் போடாத பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காலத்துக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில நாடுகளில் ஆட்சியாளர்களே இவ்விதிமுறைகளை மதிப்பதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

உதாரணமாக, முன்னாள் அமெரிக்க அதிபர் மாஸ்க் அணிவதில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதேபோல, பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவும் மாஸ்க் அணிவதில்லை என விமர்சிக்கப்பட்டார். முன்பு இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள மாரன்ஹாவோ மாகாணத்தில் ஒரே இடத்தில் 100 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும், மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 21, மாரன்ஹாவோவில் உள்ள அகைலாண்டியா பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிபர் போல்சனாரோ பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் மாஸ்க் அணியாமல் இருந்தார். மேலும், மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றதற்காக அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக மாரன்ஹாவோ ஆளுநர் ஃப்ளாவி டினோ தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா...

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகிறார் மாளவிகா மனோஜ்

சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம்...

விஜய் பிரச்சாரத்தில் வேட்பாளர் உட்பட 20 பேர் மயக்கம்

தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்