சடங்கு செய்ய வேண்டுமென வழிபாட்டிடமொன்றிற்கு அழைத்து சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
45 வயதான பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான மந்திரவாதியை, காலி மாவட்டத்தின் வாண்டுரம்ப பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகிறார்.
அண்மையில் தனது உறவினர்களுடன் குறி கேட்கவும், பரிகாரங்கள் செய்யவும் மந்திரவாதியிடம் சென்றுள்ளார்.
அனைவருக்கும் குறி சொன்ன மந்திரவாதி, அவர்களிற்கு சில பரிகாரங்கள் செய்ய வேண்டுமென கூறி, பெரும் தொகை பணம் அறவிட்டுள்ளார்.
பின்னர் பரிகார பூஜைகள் செய்தார். மந்திரிக்கப்பட்ட தேன் முடிந்து விட்டதாகவும், அருகிலுள்ள தனது வீட்டுக்கு செல்லுமாறும் அந்த குழுவை அனுப்பி வைத்துள்ளார். 45 வயதான பெண்ணை மட்டும் பரிகார பூஜைக்கு அழைத்து சென்றார்.
வழிபாட்டிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, கதவை தாளிட்ட மந்திரவாதி, சத்தம் போடக்கூடாதென பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை சகோதரிக்கு தெரிவித்து, அவர்கள் பொலிசில் முறையிட்டனர்.
ஆசாமி கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் கராப்பிட்டி வைத்தியசாலையில் பரிசேதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.