நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அக்கரபத்தனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், டயகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், திம்புள்ள பத்தன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
–க.கிஷாந்தன்-