மேலும் சில பகுதிகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
நாளை காலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களின் விபரம் வருமாறு-
இரத்தினபுரி மாவட்டத்தின்- குருவிட்ட கிராமசேவகர் பிரிவு, தெல்கமுவ நகரின் ஒரு பகுதி
கம்பஹா மாவட்டத்தின்-கிரிபத்கொட பொலிஸ் பிரிவிலுள்ள இரியவிட்டிய கிராமசேவகர் பிரிவு
காலி மாவட்டத்தின்- அம்பலாங்கொட பொலிஸ் பிரிவின் உரவத்த கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டத்தின்- டயகம பொலிஸ் பிரிவில், சந்திரிகாமம் தோட்டம், என்.எல்.டி.பி பண்ணை ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.




