தெலுங்கானாவில் உள்ள மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பிரதேசத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
வனத்துறை சோதனைச் சாவடியில் அமைந்துள்ள சிசிடிவி கமராவில் சிக்கிய இந்த விபத்து மே 22 சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.
வெளிவந்த காட்சிகளில், வனத்துறை அதிகாரி ஒருவர் சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருப்பதைக் காணலாம்.
சோதனைச் சாவடியை நோக்கி வேகமாக வரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பார்த்து, மெதுவாக வருமாறு பொலிஸ்காரர் பல முறை சைகை காண்பிக்கிறார். எனினும், அதை பொருட்படுத்தாத மோட்டார் சைக்கிள் ஒட்டுனர், மிக வேகமாக சோதனைச்சாவடியை நோக்கி வருகிறார்.
மோட்டார் சைக்கிள் சோதனைச் சாவடியை அடைந்த நேரத்தில், ஒரு விபத்தைத் தவிர்க்க, கடைசி நேரத்தில் காவலர் தடுப்பை சற்றே தூக்கினார். மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தடுப்பை கடந்தாலும், பின்னால் இருந்தவர் தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.
இந்த சம்பவம் தபலாப்பூர் கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. சோதனைச் சாவடியில் பொலிசாரிடமிருந்து தப்பிக்க அதிக வேகத்தில் கடந்து இந்த அனர்த்தத்தில் சிக்கினர்.
கொலலப்பட்டவர் 30 வயதான சுதவேனி வெங்கடேஷ் கவுட் என அடையாளம் காணப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் லக்செட்டிபேட்டை மண்டலத்தில் உள்ள கோத்தக்குமுகுதேம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி சந்திரசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துக்குப் பின்னர் பெறப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன, சோதனைச் சாவடிகளைக் கடக்கும்போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு மக்களை பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். கடைசி நேரத்தில் பொலிஸ்காரர் சோதனைச்சாவடி தடுப்பை உயர்த்தியிரா விட்டால் இருவரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் தந்தை மல்லா கவுட் என்பவர் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து, சந்திரசேகர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 ஏ இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
https://twitter.com/i/status/1396671090835918850



