Pagetamil
இந்தியா உலகம்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் எண்ணிக்கை ; இந்திய தூதரகம் தகவல்!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நாடு திரும்ப உதவும் வந்தே பாரத் மிஷன் மூலம், கடந்த ஆண்டு மே முதல் மொத்தம் 87,055 இந்தியர்கள் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்றுநோயால் வேலை இழப்பு, குடும்ப நிர்ப்பந்தம் மற்றும் குடும்பத்தில் மரணம் ஆகியவை காரணமாக இந்தியர்கள் வீடு திரும்ப வேண்டிய சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு வந்தே பாரத் மிஷனை செயல்படுத்தியது.

“கடந்த ஆண்டு மே முதல் இந்த ஆண்டு மே 18 வரை 629 வந்தே பாரத் விமானங்கள் 87,055 பயணிகளை ஏற்றிச் சென்றன” என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் மூன்று வெவ்வேறு அமைச்சகங்களின் தனி கூட்டு அறிக்கையில் வந்தே பாரத் மிஷன் விமானங்களின் ஒரு பகுதியாக சராசரியாக 180 இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்கின்றனர் என்று சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது.

“இந்த விமானங்களில் சராசரியாக சுமார் 180 பயணிகள் இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 25 விமானங்கள் சிங்கப்பூருக்கு வருகை தருகின்றன” என்று போக்குவரத்து, வெளியுறவு மற்றும் மனிதவள அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 61,799 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

‘நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!