மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணியில் பயணத்தடை விதிமுறையை மீறி கடை திறந்த உரிமையளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஊறணி பிரதான வீதியில் இயங்கிவரும் சில்லறைக்கடை உரிமையாளர் ஒருவர் வீடுகளுக்கான விநியோக அனுமதியைப்பெற்று அதற்கு மாறாக கடையை திறந்து வைத்து வியாபாரத்தினை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதனையறிந்த பொது மக்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைத்த பொலீசார் கடையை உடனடியாக பூட்ட வைத்ததுடன். உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கான தரவுகளை திரட்டி சென்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1