ஆங் சான் சூகி நலமே; விரைவில் நீதிமன்றம் கொண்டு வரப்படுவார்: வாய் திறந்தார் இராணுவ ஆட்சியாளர்!

Date:

ஆங் சான் சூகி வீட்­டில் நல­மாக இருக்­கி­றார், இன்­னும் சில தினங்­களில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்­றும் மியன்­மார் இராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் நேற்று கூறி­னார்.

கடந்த பெப்­ர­வரி 1ஆம் திகதி­யன்று நடந்த ஆட்­சிக்­க­விழ்ப்­புக்­குப் பின் அவர் அளித்­துள்ள முதல் பேட்­டி­யில் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

ஆட்­சிக்­க­விழ்ப்பு நடந்­ததை அடுத்து கல­வ­ரம் ஓயாத நிலை­யில் மியன்­மார் சிக்­கி­யுள்­ளது.

“ஆங் சான் சூகி நல­மாக இருக்­கி­றார். அவ­ரது வீட்­டில் ஆரோக்­கி­ய­மாக உள்­ளார். இன்­னும் சில நாட்­களில் நீதி­மன்­றத்­தில் அவர் மீதான வழக்கு விசா­ரணை தொடங்­கும்,” என்று மின் அவுங் லைங் பேட்­டி­யில் குறிப்­பிட்­டார்.

75 வயது சூகி ­யின் செயல்­தி­றன் பற்றி என்ன நினைக்­கி­றார் என்று கேட்­கப்­பட்­ட­போது, “அவ­ரால் முடிந்த அனைத்­தை­யும் முயற்சி செய்து பார்த்­தார்“ என்று மின் அவுங் லைங்  பதி­ல­ளித்­தார்.

கடந்த நவம்­பர் மாதம் சூகி ­யின் கட்சி வெற்­றி­பெற்­றி­ருந்த தேர்­தல், முறை­கே­டாக நடந்­தது என்று அடை­யா­ளங்­கண்­டதை அடுத்து இராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தாக அவர் மீண்­டும் வலி­யு­றுத்­தி­னார்.

இருப்­பி­னும், தேர்­த­லில் மோசடி நடந்­துள்­ளது எனும் இராணு­வத்­தின் கூற்­றைத் தேர்­தல் ஆணை­யம் மறுத்­துள்­ளது.

தேர்­தலை இராணு­வம் ஏற்று நடத்­தும் என்­றும் மக்­க­ளின் விருப்­பத்­திற்கு ஏற்ப அர­சி­யல் அமைப்­பில் மாற்­றம் தேவைப்­படும் அம்­சங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன என்­றும் மின் அவுங் லைங் கூறி­னார்.

திங்­கட்­கி­ழ­மை­யன்று சூகி நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்று கூறப்­ப­டு­கிறது.    இது­வரை அவர் காணொளி மூல­மா­கவே தோன்­றி­யுள்­ளார். அவ­ரது சட்டத்தரணிகளுடனும் அவர் நேர­டி­யா­கப் பேச அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இராணுவ ஆட்­சிக்கு எதி­ராக இயங்­கி­வ­ரும் ஓர் ஆயு­த­மேந்­திய இனக்குழு, நேற்று இராணு­வத் தளம் ஒன்­றைத் தாக்­கி­ய­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­வித்­தி­ருந்­தன.

நேற்று இராணு­வத் தளம் மீது ‘கச்­சின் சுய ஆட்சி இராணு­வம்’ மேற்­கொண்ட தாக்­கு­த­லில் அதி­க­மான கரும்­புகை சம்­பவ இடத்­தில் காணப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆட்­சிக்­க­விழ்ப்பை அடுத்து இராணு­வத்­திற்­கும் கச்­சின் சுய ஆட்சி இராணு­வத்­திற்­கும் இடையே இத்­த­கைய மோதல் நிகழ்ந்து வரு­கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்