28.7 C
Jaffna
April 12, 2025
Pagetamil
உலகம்

பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவுகோலில் 5.5 நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது.இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.02 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 113 கிலோ மீட்டர் ஆகும். இந்த நிலநடுக்கம் கியாம்பா உள்ளிட்ட பல நகரங்களிலும் உணரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.முன்னதாக பிலிப்பைன்ஸில் கடந்த 2019 அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 7 பேர் பலியாகினர். 215 பேர் காயமடைந்தனர்.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கிவுள்ளது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இதையும் படியுங்கள்

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!