பிரசாந்த் நீல் இயக்கி வரும் சலார் படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் அது குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
கே.ஜி.எஃப். படத்தை இயக்கி இந்தியாவையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். அவர் தற்போது சலார் படத்தை இயக்கி வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் சலார் படத்தின் ஹீரோ பிரபாஸ். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
இரண்டுகட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சலார் படத்தில் பிரபாஸுக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்த தகவல் அறிந்த ரசிகர்களோ, ஜோதிகாவை பார்த்தால் பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கும் அளவுக்கு வயதானவராக தெரியவில்லையே. எதுக்கு ஜோ இந்த முடிவு என்று கேட்டார்கள்.
தன் கணவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, எப்படி பிரபாஸ் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்றும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் சலார் குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
jyothikaசலார் படத்தில் ஜோதிகா நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லையாம். அவர் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறாராம்.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன்மகள் வந்தாள். ப்ரட்ரிக் இயக்கிய அந்த படம் கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஒரு பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடக்க வந்தார் ஜோதிகா. அவரின் இரண்டாவது இன்னிங்ஸில் வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரின் படங்களை சூர்யா தயாரிப்பதை பார்ப்பவர்கள் ஜோதிகா கொடுத்து வைத்தவர் என்கிறார்கள்.
மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோதிகாவின் நடிப்புத் திறமை மேம்பட்டிருக்கிறது என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.