29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

நாளை புயல் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை புயலாக மாற்றமடையக் கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு அந்தமான் கடல் பிரதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்திலும் கடல் திடீரென கொந்தளிப்புடன் காணப்படுவதுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம். 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment