யாழ். நகரை அண்டிய கடல் நீரேரிப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்றவர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்து உடனடியாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். நகரை அண்டிய கடற்றொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (22) சந்தித்துக் கலந்துரையாடிய போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான மரத் தடிகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வன இலாகா திணைக்களம் போன்றவற்றுடன் கலந்துரையாடி தேவையான தடிகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.