25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு: 13 தமிழ் எம்.பிக்களின் கையெழுத்துடன் ஐ.நாவிற்கு கடிதம்; முன்னணி முரண்டு பிடித்தது!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இரா.சம்பந்தன், பழநி திகாம்பரம்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தம் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், வினோநோகராதலிங்கம், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன்,  இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் கூட்டமைப்பின் தரப்பில் கையெழுத்திட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாமலுள்ள இரா.சம்பந்தன் இதில் கையெழுத்திடவில்லை.

தமிழ் மக்கள் கூட்டணியின், க.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திட்டார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், வேலு குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். பழநி திகாம்பரம் விடுமுறையிலுள்ளதால் கையெழுத்திடவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. செல்வம் அடைக்கலநாதன் முன்னணியிருடன் பேசிய போது, கடிதத்தை படித்து விட்டு அதில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

“எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்திட்டால் அதில் நாம் கையெழுத்திட மாட்டோம்“ என அவர்கள் கூறியதாக, சம்பவ இடத்தில் நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், தாம் ஏன் கையெழுத்திடவில்லையென்பதற்கு செ.கஜேந்திரன் தெரிவித்த விளக்கத்தில், “அந்த கடிதத்தில் போரில் கொல்லப்பட்டவர்களிற்கான நினைவுத்தூபி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ளது இனப்படுகொலையை நினைவு கூர்வதற்கான நினைவுத்தூபி. ஆனால் கடிதத்தில் அதை குறிப்பிடவில்லை. இது இனப்படுகொலையை மறைப்பதற்கான கூட்டமைப்பின் முயற்சியென்பதால் நாம் கையெழுத்திடவில்லை“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

Leave a Comment