நடிகர் மதுரை முத்து அவரது வீட்டில் மழை தண்ணீரில் கப்பல் செய்து விட்டிருக்கிறார். மூணு கழுதை வயசாச்சி இப்போ கூட இப்படியா.
மதுரை முத்துவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நீண்ட காலமாக சின்னத்திரையில் ஸ்டாண்டப் காமெடியனாக ரசிகர்களை சிரிக்க வைத்து வருபவர் அவர். சென்ற மாதம் நிறைவடைந்த குக் வித் கோமாளி இரண்டாம் சீசனிலும் அவர் போட்டியாளராகக் கலந்துகொண்டார். ஆனால் முதல் ஆளாக வெளியேறிய அவர் அதற்குப்பின் காமெடியனாக அனைத்து எபிசோடுகளிலும் அவர் தோன்றி வந்தார்.
பைனலுக்கு வந்த சிம்புவே இவரது காமெடியை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார் என்பது கூடுதல் தகவல்.மதுரை முத்து சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். மதுரை முத்து அலப்பறை என்று தான் அந்த சேனலுக்கு பெயர் வைத்திருக்கிறார்.
அதில் அவர் காமெடியாக பல்வேறு வீடியோகளை பதிவிட்டு வருகிறார் மதுரை மூத்து. காமெடி, சமையல், குழந்தைகளுடன் அட்ராசிட்டி என ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். ரசிகர்களிடம் அந்தவீடியோக்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
தற்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் நேரத்தை செலவிட்டு வரும் மதுரை முத்து, மழை பெய்த பின் தேங்கிய தண்ணீரில் பேப்பர் கப்பல் செய்து விட்டு விளையாடி இருக்கிறார்.
மூணு கழுத்தை வயசாச்சு, இப்போதும் அதை விட முடியல என அவர் தன்னை தானே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.