உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவர் ஆசைப்படுவது எல்லாம் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் கெரியர் தற்போது உச்சத்தில் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிறகு அவருக்கு மவுசு அதிகரித்துவிட்டது.
விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பலரும் விரும்புகிறார்கள். இந்நிலையில் தனக்கு வில்லனாக புதிய அங்கீகாரம் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலேயே மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கமல் ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் உலக நாயகனுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. கை நிறைய படங்கள் வைத்திருக்கிறோமே விக்ரமுக்கு டேட்ஸ் இருக்குமா என்று யோசித்தவர், கமலை விட யாரு முக்கியம் என்று ஒப்புக் கொண்டுவிட்டார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை விஜய் சேதுபதியால் ஏற்க முடியவில்லை. அதை நினைத்து வருத்தப்பட்ட அவர் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கமலிடம் கேட்டார். அந்த ஆசை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று அவர் நினைக்கவில்லை.
கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் விக்ரம் படத்தை லோகேஷ் இயக்குவதால் தனக்கு வெயிட்டான கதாபாத்திரமாகத் தான் இருக்கும் என்று நம்புகிறார்.
விஜய் சேதுபதியை மீண்டும் வில்லனாக்குகிறார் லோகேஷ் என்கிற தகவல் அறிந்ததுமே கமல் ரசிகர்களுக்கு கவலையாகிவிட்டது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு நடந்தது கமலுக்கு நடந்துவிடக் கூடாது என்பது தான்.
இப்படி பெரிய திரையில் படுபிசியாக இருக்கும் விஜய் சேதுபதி சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்நிலையில், தான் ஒரு போதும் பணத்திற்கு பின்னால் ஓடியது இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.ரசிகர்களை மகிழ்விக்கவே புது படங்கள், டிவி நிகழ்ச்சிகளை ஒப்புக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.