நள்ளிரவில் நேபாள நாடாளுமன்றம் கலைப்பு : நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

Date:

நேற்று நள்ளிரவில் நேபாளா நாடாளுமன்றத்தை கலைத்து நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி ஆறு மாதங்களில் புதிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தியூஜா தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போனதால் ஓலி சமீபத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ஓலி தனது 153 ஆதரவாளர்களின் பட்டியலை சமர்ப்பித்திருந்தார். இந்த எண்ணிக்கை தியூஜாவின் ஆதரவு எண்ணிக்கையை விட நான்கு பேர் அதிகமாகும். இந்த பட்டியலில் பல எதிர்ப்பாளர்களின் பெயர்களையும் சேர்த்துக் கொண்டார் ஓலி.

நேபாளி காங்கிரஸ், மாவோயிஸ்ட் கட்சி, சமாஜ்பாடி ஜனதா கட்சியின் ஒரு பகுதியும், ஓலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பாளர்களும், ஒருங்கிணைந்த மார்க்சிச / லெனினிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி ஓலியின் அரசாங்கத்தை தக்க வைத்துக் கொண்டால் பரவலான போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்திருந்தன.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் 39 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற ஓலியின் அரசு, தனது சொந்தக் கட்சியில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து மைனாரிட்டி அரசாக மாறியது. இவர்களின் கூட்டணியிலிருந்து மாவோயிஸ்ட் கட்சியும் வெளியேறியதால் பதவியிலிருந்து விலகும் சூழல் ஓலிக்கு ஏற்பட்டது.

நவம்பர் 12முதல் 18ஆம் தேதி வரை தேர்தல்கள் நடைபெறும் என்று அதிகாரப்பூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய அரசாங்கத்தை அமைக்க சர்மா ஓலி கோரிக்கை வைத்திருந்த நிலையில், சட்ட ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்திருக்கிறார். காபந்து பிரதமர் கேபி சர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரை பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்