கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோருடன் நேற்று முன்தினம் பிற்பகல் சுகாதார கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளல் மற்றும் சுகாதார அமைச்சு விடுத்த சுகாதார அறிவுறுத்தல்களை மீறுவதால் ஏற்படும் விளைவுகள், அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமை என்பன தொடர்பாக தனியார் ஆய்வு கூடங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தியதாவது, சுகாதார அமைச்சு விடுத்த சுகாதார வழிகாட்டுதல்களின்படி பி.சி.ஆர் சோதனைகளை நடத்த அங்கீகாரம் பெற்றது, வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகபடியான பணத்தை வசூலிக்காமல் அமைக்கப்படுகின்றது. சில மருத்துவமனைகள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை முற்றிலுமாக மீறியுள்ளதாகவும், அமைச்சின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவற்றின் திறன்களை மீறியுள்ளதாகவும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர்க்கு கிடைத்த புகார்களில் காணப்படுவதாகவும் அவர்களிடம் தெரிவித்தார்.
மேலும் தொடர்புபட்ட வைத்தியசாலைகளில் நடத்தப்பட வேண்டிய பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையுடன் தொற்றுநோயியல் பிரிவுடன் ஒருங்கிணைக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.