27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அவசியம் சேர்க்க வேண்டிய சத்துமிக்க பானங்கள்!

கொரோனா தொற்றுக்கு பிறகு நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுகிறது. திசு சேதம் மற்றும் வயிற்றில் வீக்கத்தை உண்டாக்குகிறது. பழங்கள் காய்கறிகள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இது நல்ல ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பராமரிக்க நமக்கு உதவுகிறது. அன்றாட உணவில் ஒரு பகுதியாக பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துகொள்வதை கொரோனா தொற்றுக்கு பிறகு உறுதி செய்ய வேண்டும்.ஏனெனில் இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாது பொருள்கள் நிறைந்துள்ளது. இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சாறுகள் இரத்த ஓட்டத்தில் நேரடியாக உறிஞ்சப்படுவதால் உடல் ஆற்றலை உணர்கிறது. இது கொரோனா தொற்று மீட்புக்கு வேகமாக உதவுகிறது.

தினசரி இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த நோயாளிகள் பருக வேண்டிய ஆறுவிதமான பானங்களை இப்போது பார்க்கலாம்.

​தக்காளி புதினா சாறு

தக்காளி புதினா சாறு ஆக்ஸிஜனேற்றத்தில் மிகுதியாக உள்ளது. இது செரிமானத்தை சீராக்க செய்யும். எப்படி இதை தயாரிப்பது

தக்காளி – 4

புதினா இலைகள் – அரை கைப்பிடி

எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன் அளவு

கருப்பு மிளகு – சுவைக்கு

புதினா இலைகளை ஒரு சுற்று சுற்றி பிறகு தக்காளியை சேர்த்து ப்ளெண்டரில் அரைத்து அதில் எலுமிச்சை சாறு கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம்.

​கேரட், பீட், நெல்லி மற்றும் இஞ்சி சாறு

கேரட் மற்றும் பீட்ரூட் உடலின் நச்சுத்தன்மையை நீக்க செய்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தவை இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்பவை.

கேரட்- 1

பீட்ரூட் – பாதி அளவு

நெல்லிக்காய் – 2

இஞ்சி துண்டு- சிறிய அளவு

எலுமிச்சை சாறு – கால் டீஸ்பூன்

கேரட், பீட்ரூட் இரண்டையும் தோல் சீவி நறுக்கி ப்ளெண்டரில் அரைத்து நெல்லிக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். தேவையெனில் உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம். தினமும் ஒரு டம்ளர் வீதம் இதை குடித்து வரலாம்.

​எலுமிச்சை, அன்னாசி மற்றும் பச்சை ஆப்பிள்

இந்த மூன்றுமே கால்சியம் மற்றும் வைட்டமின் சி மூலம் ஆகும். இந்த சாறு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.

அன்னாசி பழத்துண்டுகள் – அரை கப்

பச்சை ஆப்பிள் – அரை கப்

எலுமிச்சை சாறு – கால் டீஸ்பூன்

ராக் சால்ட் – சிட்டிகை

அன்னாசி பழத்துண்டுகள், க்ரீன் ஆப்பிள் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து கூழாக்கி கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு, ராக் சால்ட் அடித்து குடிக்கலாம். அன்னாசியும், க்ரீன் ஆப்பிளும் சுவையானவையும் கூட.

​கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சு சாறு

இந்த சாறு ஆக்ஸிஜனேற்றத்தால் நிரம்பியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் நோய்களை தடுக்கவும் செய்கிறது.

ஸ்ட்ராபெர்ரி – 1 கப்

கிவி பழம் நறுக்கப்பட்டது – 2

ஆரஞ்சு – 1

தண்ணீர் – தேவைக்கு

தேன் – 1 டீஸ்பூன் அளவு

ஸ்ட்ராபெர்ரி கிவி இரண்டையும் கலந்து ப்ளெண்டரில் அடித்து, ஆரஞ்சு சாறு, தண்ணீர் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.

​மஞ்சள், இஞ்சி எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பொருள்கள்

மேற்கண்ட இந்த நான்குமே ஆண்டி வைரல் மற்றும் பாக்டீரியா எதிர்பு பண்புகளை கொண்டவை.

மஞ்சள் – கால் டீஸ்பூனில் பாதி அளவு

இஞ்சி சாறு – 3 டீஸ்பூன்

எலுமிச்சை – 1 டீஸ்பூன்

ஆரஞ்சு சாறு – அரை கப்

தண்ணீர் – தேவைக்கு

ஆரஞ்சு சாறில் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தண்ணீர் போன்றவற்றை கலந்து மஞ்சள் சேர்த்து குடிக்கவும். தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்தால் போதுமானது.

​வெள்ளரிக்காய், கீரை, செலரி, எலுமிச்சை மற்றும் இஞ்சி

நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த அன்றாட உணவில் கீரைகள் அவசியம் சேர்க்க வேண்டும். இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது மேலும் செரிமானத்தை மேம்படுத்த செய்கிறது.

வெள்ளரிக்காய் – 1

கீரை – 100 கிராம்

செலரி தண்டுகள் – 3

இஞ்சி – சிறுதுண்டு

அனைத்தையும் சுத்தம் செய்து ப்ளெண்டரில் மைய அரைத்து விடவும். தேவையெனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment