24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

கொரோனாவிற்கு பலியான 22 வயது யுவதி!

அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த யுவதியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

காலி, அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த உதரி விஷ்மிகா (22) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

அவர் தனியார் மருத்துவ பரிசோதனை கூடமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளையவர்களிற்கு கொரோனா அபாயமில்லையென முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், இலங்கையில் பரவும் 3வது அலையில் இளையவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment