கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் நேற்று (21) ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த 77 வயது பெண் கொரோனாவால்
மரணமடைந்துள்ளதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுகயீனம் காரணமாக நேற்று காலை அவசர நோயாளர் காவு வண்டி மூலம் திருவையாறு
கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லும் வழியில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவரது உடல் வவுனியாவில் உள்ள மின் தகன மயாணத்தில் தகனம் செய்யப்படும்
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1
1