26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
மருத்துவம்

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும்?

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக இந்தியாவை உலுக்கி வரும் இந்த நோயை, இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடுமாறு இந்தி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பரவிய பூஞ்சை தொற்றுடன் இலங்கையில் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டல் குறிப்பொன்றின்படி, இந்த வகை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு கண் நோய் நிபுணர்கள், காது,மூக்கு,தொண்டை நிபுணர்கள், பொது மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டென்ட்டல் மேக்ஸிலோஃபேசியல் நிபுணர் என பல்துறை நிபுணர்களின் ஈடுபாடு தேவைப்படுகிறது. அத்துடன் ஆம்ஃபோடெரிசின் பி என்ற பூஞ்சை எதிர்ப்பு மருந்தையும் கொடுக்க வேண்டியுள்ளது.

இது குணப்படுத்தப்படக்கூடிய நோய். சைனஸ் போன்ற அறிகுறிகள் வந்தவுடனேயே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றால் இதனை குணப்படுத்த முடியும்.

ம்யூகோர்மைகோசிஸ் (பிளக் ஃபங்கஸ்- கருப்பு பூஞ்சை) என்றால் என்ன?

ம்யூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சைத் தொற்று. இது பெரும்பாலும் சுற்றுப்புறச்சூழலில் காணப்படும் நோய் பரப்பும் கிருமிகளை எதிர்கொள்ள இயலாத வகையில் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்களையே தாக்குகிறது. இது மிகவும் அரிதான அதேவேளையில் ஆபத்தான தொற்று. மியூகோர்மைசெட்ஸ் எனும் நோய்க்கிருமிகள் சுற்றுப்புறச் சூழலில் எப்போதுமே இருப்பவை தான். மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது.

இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும் காற்றிலும் மற்றும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட காணப்படுகிறது. ஆனால், உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்துகளை உட்கொண்டு அதனால் சுற்றுச்சூழல் கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவர்களையே எப்போதும் குறிவைக்கிறது.

யாருக்கு இந்தத் தொற்று ஏற்படும்?

இணை நோய்கள் கொண்டவர்கள், கட்டுக்குள் வராத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டெராய்டு மருந்துகள் கொண்டு சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு இந்தத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ம்யூகோர்மைகோசிஸ் அறிகுறிகள் என்னென்ன?

கண்களைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தடிப்புகள், அல்லது கண்களைச் சுற்றி வலி, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், இரத்தக்கசிவுடன் வாந்தி, மனப்பதற்றம் அல்லது குழப்பம் ஆகியன இந்நோயின் அறிகுறிகளில் சில.

இருப்பினும் எல்லா மூக்கடைப்பும் ம்யூகோர்மைகோசிஸ் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

ம்யூகோர்மைகோசிஸ் எனப்படும் இந்த பிளாக் ஃபங்கஸ் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

சிகிச்சை என்ன?

பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சை தான் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 4 முதல் 6 வாரங்களுக்கு மாத்திரை, மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை தொற்றின் வீரியம் அதிகமாக இருப்பின் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க மக்கள் தங்களின் இரத்த சீனி அளவை சரியாக வைத்துக் கொள்வதுடன், ஸ்டீரொய்ட் மருந்து பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி தற்காத்துக் கொள்ளலாம்?

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த சீனி அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். அதுவும் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகள் கவனமுடன் சீனியின் அளவை கண்காணிக்க வேண்டும். ஸ்டீரொய்ட் மருந்துகளை அவசியமறிந்து அவசரமறிந்து மட்டுமே பயன்படுத்துக. ஒட்சிசன் தெரபியின் போது நோயாளிகளுக்கு சுத்தமான நீரைக் கொண்டு ஈரப்பதமூட்டிகளை தயார் செய்ய வேண்டும். ஆண்டிபயோடிக், ஆண்டி ஃபங்கல் மருந்துகளையும் அவசியமின்றி உட்கொள்ள வேண்டாம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment