டில்லி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையை பூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் 13 ஆம் இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அம்பானி 14 ஆம் இடத்தில் உள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் வரிசையில் அம்பானி முதல் இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
சீனாவைச் சேர்ந்த ஸாங் ஷான்ஷான் முதலில் ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முதல் இடத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து அவர் முதல் இடத்திலும் ஷான்ஷான் இரண்டாம் இடத்திலும் இருந்தனர்.
இதில் அம்பானியின் சொத்து மதிப்பு 76.5 பில்லியன் டாலர்கள் ஆகும். ஷான்ஷான் சொத்து மதிப்பு 63.6 பில்லியன் டாலராக இருந்தது.க் தற்போது வெளியான பட்டியலின்படி உலக அளவில் 14 ஆம் இடத்தில் உள்ள செல்வந்தராக அதானி விளங்குகிறார். இவருடைய சொத்து மதிப்பு தற்போது 66.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் அடிப்படையில் ஷான்ஷானை இரண்டாம் இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளி அதானி தற்போது ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.