கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி – மஜ்மா நகர்ப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த இடத்தில் 20 வியாழக்கிழமை மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
அந்தவகையில், கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான நான்கு நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில், இஸ்லாம், கிறிஸ்தவ, சைவ, சிங்கள சமயங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள.
நேற்று 20ம் திகதி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட 8 உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1