29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

மனைவிக்கு கொரோனா; பிள்ளைகளுடன் கணவன் உண்ணாவிரத போராட்டம்: கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 03 சிறுவர்களும் தந்தையும் நேற்று (20) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளர்கள் 24 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒரு பெண்ணின் பிள்ளைகளும் கணவனுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி அக்கராயன் மணியங்குளத்தினைச் சேர்ந்த தன்னுடைய மனைவிக்கு நேற்று பிற்பகல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதிலும் தனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை என்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேருவதாகவும் தம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துமே போராட்டத்தில் ஈடுபடுவதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களிற்கு முன்னரே தற்போது உள்ள சூழலில் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என தாம் மறித்த நிலையில், தொழிற்சாலை ஊழியர்களால் நம்பிக்கையூட்டப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் கணவர் தெரிவிக்கின்றார்.

குறித்த குடும்பத்தாருடன் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட எடுத்த முயற்சி நீண்ட நேரத்தின் பின்னர் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடலின் பின் முடிவுக்கு வந்தது.

குறித்த பெண் குணமடைந்து திரும்பும்வரை அக்குடும்பத்திற்கான உதவிகளை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்திருந்தது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு பலதரப்பட்ட தரப்புக்களாலும் கோரிக்கைகள் பரவலாக விடுக்கப்பட்டுவந்துள்ள சூழலிலும் இன்றுவரையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறான சூழலில் பல குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றமை குறித்து இனியாவது உரிய தரப்புக்கள் செவி சாய்க்குமா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment