26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 38 மரணங்கள் பதிவாகின!

2021 மே மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 38 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (20) அறிவித்தார். நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிக பட்ச எண்ணிக்கை இதுவாகும்.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்கள் உடுகித்த, லுனுகல, பலாங்கொட, கட்டுநாயக்க, பாந்துருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓய, பண்டார கொஸ்வத்த, பொரல்ல, பாதெனிய, தோரயாய, பொல்கஹவெல, கல்கமுவ, சியம்பலாபே, மத்துகம, எதென்னவத்த, நாவலப்பிட்டி, குருநாகல், யட்டியாந்தோட்டை, பொல்கஹவெல, பெலிஹூல்ஒய, நேபட, கெக்குனுகொல்ல, நிக்கவெரட்டி, வரக்காபொல, அம்பிட்டி, மாரஸ்ஸன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ போன்ற பிரதேசங்களை வதிவிடமாகக் கொண்டவர்களைக் கொண்டவர்கள்.

அவர்களில் 24 பேர் 71 வயதைக் கடந்தவர்களாவர், 10 பேர் 61 தொடக்கம் 70 வயதிற்கிடைப்பட்டவர்கள், ஒருவர் 51 தொடக்கம் 60 வயதிற்கிடைப்பட்டவர், ஒருவர் 41 தொடக்கம் 50 வயதிற்கிடைப்பட்டவர், ஏனைய இருவரும் 31 தொடக்கம் 40 வயதிற்கிடைப்பட்டவர்கள் ஆவர்.

கொவிட் நிமோனியா, நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் உருவாகிய சிக்கலான நிலைமைகள் மரணங்களுக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களாவதுடன், 19 பேர் ஆண்களாவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

Leave a Comment