தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கொரோனா தொற்றுக்கு பெண் உயிரிழந்த வேதனையில், கணவர், மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜன்(57). இவரது மனைவி மீனா(45). மகன் மனோஜ்குமார் (26). கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கண்காணிப் பாளராக பணிபுரிந்து வந்த கனகராஜன், அங்கு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மீனா, கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே மீனாவுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
அதன் பின்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மாமனார் ஊரான தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டிக்கு கனகராஜன், தனது மகன் மனோஜ்குமாருடன் வந்திருந்தார். மீனா இறந்த 30ஆம் நாளையொட்டி கடந்த 18ஆம் திகதி நரங்கிப்பட்டி குளத்தில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது.
மீனாவின் மறைவால் வேதனையில் இருந்த கனகராஜனும், மகன் மனோஜ்குமாரும் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.