மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
மாவட்டத்தின் ஒரு பகுதியில் இன்று நடந்த திடீர் அன்டிஜன் சோதனையை செய்தி சேகரிக்க சென்றிருந்தார். அவருக்கு இலேசான உடல் வலி இருந்த நிலையில், தன்னையும் அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் அண்மை நாட்களில் பல்வேறு இடங்களிற்கும் செய்தி சேகரிக்க சென்றிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், மாநகர முதல்வர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடமும் கடந்த சில தினங்களிற்கு முன்னர் பேட்டி எடுத்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1