மதுரையில் நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மதுரையின் முக்கிய சந்திப்புகளில் கவால்துறையினர் வாகன சோதனைசாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வருகை தரும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனாவின் வீரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெற்குவாசல் காவல்நிலைய எல்லையிலுள்ள போக்குவரத்து சந்திப்பில் காவல்துறை இசைக்குழு ஆயுதப்படையை சேர்ந்த காவலரான மதிச்சியம் பாலா நூதனமுறையில் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை பாடியும், கொரோனா பரவலால் தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை எடுத்துக்கூறியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
தெற்கு வாசல் காவல்துறையினரின் இந்த வித்தியாசமான அணுகுமுறையை பார்த்து வாகன ஓட்டிகள் பாராட்டிசென்றனர். தொடர்ந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருவது பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.a