நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பலவிதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக திரைத்துறை பிரபலங்கள் தெரிவிப்பதும், வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிப்பதும் வாடிக்கையாகி உள்ளது. திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்களும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அறிவித்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ ஜிவி பிரகாஷ் நடித்த ‘வாட்ச்மேன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இவரின் பெற்றோர்கள் கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, வீட்டிலே இருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தனது பெற்றோர் கொரோனாவல் பாதிக்கப்படிருந்த போது, அவர்களுக்காக ரெம்டெசிவிர் மருந்து வேண்டி உதவி கோரிஇருந்தார் சம்யுக்தா. அது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டுவிட்டேன் கிடைக்கவில்லை, தயவு செய்து உதவுங்கள், தனக்கு 6 ரெம்டெசிவிர் குப்பிகள் தேவை என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிர்ருந்தார்.
இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே தான் கொரோனாவால் பாதிக்கப்படிருப்பது குறித்து, நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருக்கிறேன். என் பெற்றோரும் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பியதற்காக இந்த உலகத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.