24.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
கிழக்கு

கணவனிற்கு மதுபானத்தில் நஞ்சை கலந்து கொடுத்த மனைவி கைது!

கணவனுக்கு மதுபானத்தில் நச்சுதிரவத்தை கலந்து கொடுத்த மனைவியை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்து இரு வாரங்களுக்கு முன்னர் அவரது கணவன் அருந்தும் மதுபானத்தலில் நச்சு திரவத்தை கலந்துள்ள நிலையில் அவர் அதனை குடித்து மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

அவர் அருந்திய மதுபானத்தை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்து அதில் நச்சுதிரவம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்து குறித்த நபரின் 51 வயதுடைய மனைவியான பெண்ணை சந்தேகத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணை நேற்று (19) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

east tamil

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு

east tamil

வெருகலில் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு – கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

east tamil

லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று

east tamil

கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

east tamil

Leave a Comment