இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் போர்நிறுத்தம் கோரி முன்மொழியப்பட்ட ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை எதிர்ப்பதாக அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ஏற்கனவே நான்கு முயற்சிகளை அமெரிக்கா தடுத்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் பத்திரிக்கை வெளியீட்டு தீர்மானத்தை உருவாக்கியது. மற்ற அனைத்து சபை உறுப்பினர்களும் இந்த அறிக்கையை ஆதரித்ததாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ள அனைத்து 15 சபை உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. ஆனால் ஒரு தீர்மானத்திற்கு குறைந்தது ஒன்பது ஆதரவு வாக்குகள் மட்டுமே தேவை. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் இதில் வீட்டோ அதிகாரம் இல்லை.
முன்னதாக, உத்தேச தீர்மானம் குறித்து இன்று அமெரிக்காவுடன் மிகவும் தீவிரமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பிரெஞ்சு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஐ.நா தூதர்கள் காசாவிற்கு போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க மிஷனின் செய்தித் தொடர்பாளர், “வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீவிர இராஜதந்திர முயற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்பதையும், ஆனால் இது போன்ற நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்பதையும் நாங்கள் தெளிவாகவும், சீராகவும் வைத்திருக்கிறோம்.
இது மோதலை தீர்ப்பதற்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.