அமெரிக்காவில் ஒரு இந்து கோவிலொன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், தாம் அடிமைகள் போல நடத்தப்படுவதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் பல இந்து கோவில்களை கட்டிய அமைப்பு மீது நியூஜெர்சியில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் பலர் பட்டியலினத்தவர்கள். தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், அடிமை போன்று நடத்தப்பட்டதாகவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.
உணவு, தங்குமிடம், ஊதியம் கூட வழங்காமல் கொடுமை படுத்தினர் என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மே.11 ஆம் திகதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தன்னார்வலர்கள் என அழைத்து செல்லப்பட்டு அவர்கள் அங்கு கொத்தடிமை போன்று பணியாற்ற வைத்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால் தொழிலாளர்களின் குற்றச்சாட்டை அமெரிக்காவில் இந்துக்கோயில் கட்டும் பொக்ஸ் மற்றும் ஸ்ரீ சத்திய நாராயணி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பங்கள் நடைபெறவில்லை என அங்கு வசிக்கும் இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.