யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் நேற்று பதிவாகியது.
குருநகரை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவர் சுகவீனமடைந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லையென்பது தெரிய வந்தது.
அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
சடலத்தை உறவினர்களிடம் வழங்குவதற்கு முன்னர் மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1